ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட கொடுக்காத தணிக்கை குழு

36-Vayadhinile-Music-Review

ஜோதிகா கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்தான் இந்த படம். மலையாளத்தில் இயக்கிய ரோஜன் ஆன்ட்ரூவ்ஸ் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஆடியோ வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவிற்கு இப்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு இடத்தில் கூட பீப் அலாரம் வைக்காமல் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து வருகிற மே 15-ல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.