ஜெயலலிதா பிரசாரம் – ஆர்.கே. நகர் தொகுதியில்

jayalalitha

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடற்கரை சாலை, தலைமைச் செயலகம், துறைமுகம், ராயபுரம் கல் மண்டபம், காசிமேடு செக் போஸ்ட், வரதராஜ பெருமாள் கோவில் வழியாக அவரது கார் வந்தபோது அங்கு திரண்டிருந்த மகளிர் அணியினர் பூரண கும்பம் ஏந்தி, அவருக்கு வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலகம் அருகே படுகர் இனத்தவர்கள் நடனமாடி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் பேச ஆரம்பித்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பேசியபோது கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.