ஜூலை 26, 2015 அன்று நடைபெற்ற TNPSC Group 2 தேர்வில் சில சுவாரஸ்யமான பொது மற்றும் நிகழறிவு கேள்விகள் கேட்கப்படிருந்தது.

TNPSC Group 2 Exam

ஜூலை 26, 2015 அன்று நடைபெற்ற TNPSC Group 2 தேர்வில் சில சுவாரஸ்யமான பொது மற்றும் நிகழறிவு கேள்விகள் கேட்கப்படிருந்தது. அவற்றில் ஒரு சில கேள்வி மற்றும் பதில்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாக கூறப்படும் உலோகம்?
விடை : ஈயம்.
பெண் குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயர் எது?
விடை : சுகன்யா சம்ரித்தி திட்டம்.
இரும்பு பாதை இல்லாத இந்திய மாநிலம் எது?
விடை : நாகலாந்து.
சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் நாள்?
விடை : ஜூன் 21.
மே மாதம் 2015 ல் இந்தியா எந்த நாட்டுடனான எல்லை பிரச்சனைக்கு தீர்வு கண்டது?
விடை : வங்காள தேசம்.
யோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் பெற்ற ரயில் எது?
விடை : ஹரித்வார் விரைவு வண்டி.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : ஆப்ரேஷன் மைத்ரி.
வந்தேமாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை : ஆனந்த மடம்.
தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது ?
விடை : 52 நிமிடம் தாமதமாக.
EDGE என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை : Enhanced Data for Global Evolution.
19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?
விடை : ஐ.என்.எஸ் – கவராட்டி.
எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
ஒடிசா.
பெருமைக்குரிய ‘தங்கமயில் தேசிய விருதை’ 2015 ல் வென்ற இந்திய விமான நிலையம் எது?
விடை : தில்லி சர்வதேச விமான நிலையம்.
இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்தியாவில் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?
விடை : தேனி மாவட்டம், தமிழ்நாடு.
மார்ச் 1, 2105 ல் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
விடை : முஃப்தி முகம்மது சையித்.
முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
விடை : ஸ்ரீ.ராஜகோபாலச்சாரி.
நாட்டிய சாஸ்திரம் எழுதிய ஆசிரியர் யார்?
விடை : பாரதமுனி.
தொழு நோயின் மற்றொரு பெயர் என்ன?
விடை : ஹன்சன்ஸ் நோய்.
தமிழ் இலக்கியத்தில் புனையப்பட்ட முதல் புதினம் எது?
விடை : பிரதாப முதலியார் சரித்திரம்.
ஆங்கில பாராளமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
விடை : தாதாபாய் நொரோஜி.
இந்திய அரசியலமைப்பு விதி 360 எதை பற்றி கூறுகிறது?
விடை : நிதி நெருக்கடி.
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் யார்?
விடை : திரு. தாதாசாகிப் பால்கே.
இந்தியாவின் 66 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் யார்?
விடை : பாரக் ஒபாமா.
ஃபார்வர்ட் பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார்?
விடை: சுபாஷ் சந்திர போஸ்.
“The Past Before Us” என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : ரொமிலா தாப்பர்.