சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Supreme-Court-building-New-Delhi-India

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது !!!

கடந்த வாரம் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பற்றிய தீர்ப்பில் குற்றவாளியை
ஜாமீனில் விடுதலை செய்வதன் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை
சந்தித்து சமரசம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை
ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டதார்.

இந்நிலையில் ம.பி.யில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது சட்டவிரோதம்

அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

நீதிபதி தேவதாஸ் சமரசம் செய்துக்கொள்ளும்படி கூறிய பெண், தனக்கு குற்றவாளியுடன் சமரசம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .