சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

Metrorail

ென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.

உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு – ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை இன்று (திங்கட்கிழமை) முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.