சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல்

the_yam_times_blast1-660x330

30 பேர் பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்
கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றபோது, பயங்கரமான மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மனித வெடிகுண்டு தாக்குதலை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.
சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தற்போது வரை 30 பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் அரசிற்கு ஆதரவாக சவுதி அரேபிய அரசு அங்குள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் ‘ஏமன் நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் சவுதி அரேபியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்’ என மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.