காமராஜர் -111 – பகுதி 6

Kamarajar

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம்
நோகும்படி பேச மாட்டார். அரசியல்
காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன்
மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த
அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும்
ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்
காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர்
வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார்,
சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்
1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்
கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்
சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப்
பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க
உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி,
இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்
மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும்
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது.

67. காமராஜர் ஆட்சியில்தான் 60
வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம்
கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய
கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்
திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த
நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில்
ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த
பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ்
அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர்
இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில்
காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும்,
ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்
பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.