காமராஜர் -111 – பகுதி 5

Kamaraj

1. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன்
எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த
போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர்.
அவர்களோடு ஆங்கிலத்தில்
பேசி ஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார்
33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28
கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்
கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில்
ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்
தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை.
அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர்,
ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு.
காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப்
பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்
விரும்பி சாப்பிடுவார்

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில்
யாரும் எதையும் ஊகித்து விட முடியாது.
எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்’,
`ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சிறுவார்த்தைதான்
அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில்
இருந்து சென்னைக்கு கொண்டு வந்த
ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப்
பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.
சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால்
காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ என
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம்
கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச்
சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்
காமராஜரும் கலந்து கொண்டார்.