காமராஜர் -111 – பகுதி 4

Kamarajar

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும்
சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால்
போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத்
தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்
இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த
ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக
படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும்
போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன்
விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,
இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம்,
நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று செய்து விட மாட்டார். நிதானமாக
யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த
செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட
மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்
கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்
வந்தாலும் அவர்கள் எல்லாரையும்
அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர்
பேசும் போது சாதாரண கிராமத்தான்
போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய
காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த
நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம்
கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்
என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’
என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால்
`கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும்
வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில்
சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.