காமராஜர் -111 – பகுதி – 4

kamarajar 2

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில்
காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும்
பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,
இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்
பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்
பாடுபட்டார்.

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ்
ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

44. காமராஜர் புகழ்
இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது.
அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள்
நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும்
என்று வேண்டுகோள்கள் விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்
சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,
செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய,
பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும்
சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய
இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்
முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது.
ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல்
454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்
ரிப்பன் மாளிகையின் எதிரில்
ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்’டில்
தான் தங்குவது வழக்கம்.
ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்
கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்
தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின்
போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின்
ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி’ என்ற
பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.