காமராஜர் -111 – பகுதி 2

kamarajar-2

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர்
துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர்
இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்
பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், ”
என்னய்யா… இது?” என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான்
“கேக்” வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்
மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த
விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய
தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான் இந்திய
பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர்
என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான்
மேடைகள்தோறும் “காமராசர்” என்று கூறி நல்ல
தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற
பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம்
எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக
அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்த
கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும்.
எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம்
படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்
தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான
அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க
அலுவலர்களை பணி நீக்கம் செய்யும்
கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட
மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும்
வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்
பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.