கறிவேப்பிலை

curry-leaf-plant-murraya-koenigii--[3]-153-p

மிக மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, ருசிக்காவும், உணவில் மணம் கூட்டவும் சேர்க்கப்படுகிறது. உணவு உண்ணும் போது, கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கத் தான் பலர் எண்ணுகின்றனர்.
ஆனால், அந்த கருவேப்பிலையில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். கருவேப்பிலை, சத்து நிறைந்த உணவுப்பொருள். இதில், 63 சதவீத நீர், 6.1 சதவீத புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 4 சதவீதம் தாது உப்பு, 6.4 சதவீத நார் சத்து, 18.7 சதவீத மாவு சத்து உள்ளன.
சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம் மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்ற சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. நாட்டு கருவேப்பிலை உணவாகவும், காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுத்தப்படு
கிறது.
காட்டு கருவேப்பிலையின் இலை, சற்றுப்பெரிதாக, கசப்பு சுவை அதிகம் உள்ளதாக இருக்கும். நாட்டு கருவேப்பிலை இலை அதைவிட சிறிதாக, இனிப்பும், துவர்ப்பு சுவையுடன், நறுமணம் வீசக் கூடியதாக இருக்கும். கருவேப்பிலையின் இலை, பட்டை, வேர் போன்ற பிற பொருட்களும் உணவாக, மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.
துவரம் பருப்பு, மிளகு, வர மிளகாய், கருவேப்பிலை, புளி ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியான குழம்பு தயாரித்து உண்பது, கர்ப்பிணிகளுக்கு நல்லது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடுவதன் மூலம், வளரும் கருவுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.
பெண்களுக்கு இருக்கும் முடிக் கொட்டும் பிரச்னை நீங்குவது மட்டுமின்றி கண்பார்வையும் நன்றாக தெரியும்.
மேலும் ஆரோக்கிய தகவல்களுக்கு… :