கருணாநிதி,ஸ்டாலின் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம்…..

Stalin_Karunanidhi

மெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக ஆதாயம் தேட முயல்கிறது பொய்யான தகவலை ஸ்டாலின் அளித்துள்ளார்.. 2003ம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடர்பான சாத்திய கூறுகளை ஆராய்ந்தது அதிமுக அரசு தான். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு 3% பணிகளே முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டுகால அதிமுக ஆட்சியில் 73% பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் திறக்கப்பட்டது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது அதிமுக தான் மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வது மாநில அரசு அல்ல.. மக்கள் தனக்கு அளித்து வரும் ஆதரவை கண்டு கருணாநிதி ஸ்டாலினால் பொருத்து கொள்ள முடியவில்லை.. மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது சக பயணியை கன்னத்தில் அமைந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொது இடங்களில் அனைவருக்கும் சம அளவு உரிமை உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற மாண்பை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும்