கமெரா மற்றும் தொடர்பாடல் சாதனங்களை உள்ளடக்கிய நவீன ரக தலைக்கவசம்

bollywood-writer-joins-ajith-55

உலகத்தரம் வாய்ந்த தலைக்கவசங்களை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Forcite ஆனது கமெரா மற்றும் தொடர்பாடல் சாதனங்களை உள்ளடக்கிய நவீனரக தலைக்கவசத்தினை வடிவமைத்துள்ளது.
இதில் இணைக்கப்பட்டுள்ள கமெராவானது 160 டிகிரி கோணத்திலும், 120fps எனும் வேகத்திலும் காட்சிகளை பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.

தவிர புளூடூத் தொழில்நுட்பமும் தரப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளை இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இதில் உள்ளட தொடர்பாடல் சாதனத்தின் ஊடாக 50 மீற்றர் தூரத்தில் காணப்படும் மற்றொரு நபருடன் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.