கடந்த ஆண்டில், நாட்டின், சினிமா, விளையாட்டு, எழுத்தாளர்கள் போன்ற முன்னணி பிரபலங்கள் பட்டியலை, பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ajith13214_m

அதில், அதிகமாக சம்பாதித்து, ரஜினிகாந்த், விஜய்யை பின்னுக்கு தள்ளி, ‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும், அஜித்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் இந்த பிரபலங்கள் சம்பாதித்த பணம், அவர்களின் மொத்த பண தரவரிசை மற்றும் புகழின் அடிப்படையில், ஒன்று முதல், 100 வரை பட்டியலிடப்பட்டுள்ளனர்.

முதல் இடத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார். அவர், கடந்த ஆண்டில், 244 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்; பணத்திலும், புகழிலும் முதல் இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில், அமிதாப் பச்சன் உள்ளார். அவர், 197 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

அவரை அடுத்து, ஷாரூக் கான், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர், 202 கோடி ரூபாய்
சம்பாதித்துள்ளார்.

நான்காவது இடத்தில், கிரிக்கெட் வீரர் தோனி; ஐந்தில், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார்; ஆறாவதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி; ஏழாவதாக, அமீர் கான்; எட்டாவதாக, நடிகை தீபிகா படுகோனே; ஒன்பதாவதாக, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்; 10வது இடத்தில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

தமிழகத்தை பொறுத்தமட்டில், நடிகர் விஜய், 41வது இடத்தில் உள்ளார். இவர், கடந்த ஆண்டில், 33 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். பணத்தில், 23வது இடத்திலும், புகழில், 80வது இடத்திலும் உள்ளார்.

‘தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்’ என, புகழப்படும் ரஜினிகாந்த், 45வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில், 37 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். பணத்தில் 21வது இடத்திலும், புகழில் 89வது இடத்திலும் உள்ளார்.

ஆனால், 51வது இடத்தில் உள்ள அஜித், சம்பாத்தியத்தில், விஜய், ரஜினியை பின்னுக்குத் தள்ளி, 40 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். பணத்தில் 19வது இடத்திலும், புகழில் 98வது இடத்திலும் உள்ளார். இதன் மூலம், இந்த மூவரில், கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தது, அஜித் என்பது தெரிய வருகிறது.

ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், 78வது இடத்தில் உள்ளார். அவர், 12 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். பணத்தில் 53, புகழில் 77வது இடத்தில் உள்ளார்