ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது !

bovonto1

திருநெல்வேலியை சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.