உலகிலேயே 102 வயதில் டாக்டரேட் பட்டம் பெறும் மூதாட்டி .

Berlin

பெர்லின்
வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துள்ளார் ஜெர்மனை சேர்ந்த மூதாட்டி
ஒருவர். அவர் தனது 102 வயதில் மருத்துவத் துறையில் டாக்டரேட் பட்டம்
பெறவுள்ளார்.

நாஜிக்களின் இனவெறியால் இவருக்கு வழங்க வேண்டிய பட்டத்தை நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தது. இழந்த தனது கனவை 77 வருடத்திற்கு பின்
வைராக்யத்துடன் அவர் மீட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த இன்ஜெபோர்க் ரபோபோர்ட் 1988-ம் ஆண்டு தொண்டை அழற்சி
நோயில் டாக்ட்ரேட் பட்டம் பெறும் கனவுடன் தீவிரமாக படித்து வந்தார்.

அதன்படி, 1938-ம் ஆண்டில் தனது 25-ம் வயதில் டாக்டரேட் பட்டம்
முடித்தார். ஆனால் அவர் தாய் யூதர் என்பதால் அவரது தேர்வு படிவங்களை நாஜி
அரசு நிராகரித்தது.

இன்ஜெபோர்க் ரபோபோர்ட்டின் மகன் டாமி கடந்த வருடம் ஹார்வர்டு
பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரின் விடாமுயற்சியால் தன் தாய்க்கு வழங்க வேண்டிய டாக்டரேட் பட்டம்
குறித்து அவர் படித்த ஹாம்பர்க் பல்கலையை தொடர்பு கொண்டு கேட்டார்.

பல்கலை நடத்தும் வாய் வழித்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பட்டம்
வழங்குவதாக பல்கலைக்கழகம் கூறியது. அதன்படி வாய் வழித் தேர்வில் தேர்ச்சி
பெற்று ஜூன் 9-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 102 வயது
மூதாட்டியான இன்ஜெபோர்க் ரபோபோர்ட்க்கு பட்டம் வழங்க உள்ளனர். இதனால்,
உலகிலேயே அதிக வயதில் டாக்டர் பட்டம் பெறும் நபர் என்ற சாதனையை அவர்
பெற்றுள்ளார்