உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது

plane

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம் அந்நாட்டின் சென்யாங் ஏரோ ஸ்பேசிங் பல்கலை மற்றும் லியோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்றுள்ளது.
50 அடி நீள இறக்கை கொண்ட இந்த விமானம் 230 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாக இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் சராசரியாக 60 கிலோ எடையுள்ள நான்கு பேர் பயணிக்க முடியும். இதன் மாடல் எண் பி.எக்ஸ்.1. இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் ஆகக் கூடிய இந்த விமானம் 45 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை பறக்கக் கூடியது. அதிக பட்சமாக மணிக்கு 160 கி.மீ வரை பறக்கும். 10,000 அடி உயரம் வரை பறக்கும்.
முதல் இரண்டு எலெக்ட்ரிக் விமானங்களை சீனாவின் லியோனிங் ரிக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனி வெளியிட்டுளளது. ஒரு விமானத்தின் விலை இந்திய மதிப்பில் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய். இது வரை இந்த கம்பெனிக்கு 28 விமானங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
இவ்வகை விமானங்கள் விமானி பயிற்சிக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், மீட்புப் பணிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று இவ்விமானத்தை தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.