உயிர்வலி …!

Holding-Hands-36

நித்தமுனை சிந்தனை செய்தேன்!
நிதர்சனம் நீயே என்றேன்!
நினைவிலே இல்லை என்றாய்!
நீள்கடல் சுருங்கும் என்றாய்!
காரியமென்றால் மட்டும்!
கட்டுண்டு கிடப்பாயென்றாய்!
கருவென நினைத்தேனுன்னை!
கழுதைக்கு நிகராய் வைத்தாய்!
உயிரற்ற மரம்போலல்ல
உயிருண்டு மெய்யும் உண்டு!
உனக்கென இடமளித்தேன்!
உதறினாய் உளத்தை கொன்றாய்!
உதாசினம் உனதியல்பு!
உண்மை மட்டும் தான் எனதியல்பு!
உனக்கென்ன மேலே நின்றாய்!
உடைந்ததென்னவோ என் இதயம்!
உயிர்வலி இனியும் வேண்டாம்!
உடனடியாய் உரியது செய்!