உன் திமிருக்கு அழகென்று பெயர் !

images

 

அழகென்று பெயர் – தமிழுக்கு மட்டுமல்ல
உன் திமிருக்குந்தான் !

தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை
உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ ?

என் திமிருக்குள் அழகான பாரதியே !
என் அழகுகுக்குள் திமிரான பாரதியே !

உன் அழகுக்குள் மட்டுமல்ல,
உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு !

அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன்
திமிராகத் திரியும் உன் அத்தனையும்!

முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல ,
நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ !
நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ!

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை – ஆம்
தன வாழ்க்கையில் பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை !

கண்நிறைய கோபமும், மனம் முழுக்க காதலும்
குழம்பிப்போனவன் நீ, என்னை குழப்பிப்போனவன் நீ!

நானில்லையே உன் பக்கத்தில் – உன் இதழை புதுப்பிக்க!