இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா – ஐந்து வழிகள்

photo_2015-05-29_09-38-26

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். பசி ருசி அறியாது, நித்திரை சுகமறியாது என்று சொல்வார்கள். நிலத்தில் கடுமையான உழைக்கும் விவசாயி, கட்டிட தொழில் உள்பட அமைப்புச் சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோருக்கு உழைப்பின் நிமித்தமாக இரவில் நல்ல தூக்கம் வரும். ஆனால் ஏசி அறையில் அமர்ந்து ஹாயாக பணியாற்றுவோர், வேலையில்லாமல் ஊர்சுற்றுவோர், சமூக பணி என்ற பெயரில் அரசியல் நடத்துவோர் உள்பட உடலுக்கு வேலை கொடுக்காமல், நெற்றியில் துளி வியர்வையும் சிந்தாமல் உள்ளவர்களுக்கு தூக்கம் என்பது எட்டா கனியாகவே உள்ளது. இப்படி இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து காலம் கழிப்பவர்கள், நிம்மதியான உறக்கம் கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள ஐந்தில் ஏதாவது சிலவற்றை பின்பற்றினால் நல்ல தூக்கம் வரும்.

1.செர்ரி பழம்:

நமது உடலில் இருக்கும் உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது. நமது தூக்கத்தையும் கட்டுபடுத்துகிறது. இந்த கடிகாரத்தின் உறக்கத்தை நெறிபடுத்தி ஆணையிடும் திறன் மெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள். இரவில் படுக்க செல்வதற்கு முன் இரண்டு பழங்கள் சாப்பிட்டால், நிம்மதியான உறக்கம் வரும்.

2.வாழைப்பழம்:

பழவகைகளில் இயற்கையான தசை, தளர்த்தியான பொட்டாஷியம் மற்றும் மெக்னிஷியம் சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளது. இது தவிர எல்ட்ரிப்டோ பன் என்ற அமினோ வாழைப்பழத்தில் உள்ளது. இந்த அமிலமானது 5HTP என்ற ரசாயனமாக மூளைக்குள் மாறி விடும். அதை பயன்படுத்தும்போது, 5HTP என்ற ரசா யனம் செரடோனின் மற்றும் மெலடோனியாக மாறி இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

3.டோஸ்ட்:

பொதுவாக நாம் காலையில் சாப்பிடும் டோஸ்டுக்கும், இரவில் வரும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மாவு சத்துள்ள பொருளில் தயாரிக்கும் உணவுகள் அனைத்திலும் இன்சூலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும் சக்தி கொண்டவையாகும். இந்த இன்சூலின் ஹார்மோன் தூக் கத்தை தூண்டும் சக்தி கொண்டுள்ளது. இந்த இன்சூலின் ஹார்மோன் மூளை வழியாக ட்ரிப்டோபன் மற்றும் செரபோனை ரத்தத்தில் அதிகரிக்க செய்யும் உணர்வை தூண்டுகிறது. அப்போது மூளையில் இருந்து வெளியாகும் மேற்கண்ட இரு ரசாயனங்களும் தூக்கத்தை தூண்டும் திறன் கொண்டுள்ளது. தரமான பொருட்கள் மூலம் தயாரிக்கும் டோஸ்டுகள் சாப்பிடும் பட்சத்தில் நல்ல தூக்கத்தை அனுபவிக்கலாம்.

4.ஓட்மீல்:

நமது முன்னோர்கள் உடலில் சக்தி வரவேண்டுமானால் நவதானியங்களை ஒன்றாக அரைத்து மாவு போல் உருவாக்கி அதில் கூழ் செய்து தினமும் குடிக்க செய் தனர். நாகரீகமும், தொழில் நுட்பமும் வளர்ந்ததின் பலனாக உரலில் அரைத்து பயன்படுத்திய நவதானியங்கள் இயந்திரத்தில் அரைத்து பேக்கெட் வடிவில் ஹார் லிக்ஸ், போர்ன் விட்டா, காம்ப்ளான் உள்பட பல பெயர்களில் நவீனமாக்கி விற்பனை செய்யப்படுகிறது. அப்படி ஓட்மீல் என்ற பெயரில் விற்பனை செய்வது தான் இந்தியாவில் ஓட்ஸ் என்று விற்பனை செய்யப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள டோட்ஸ் சில் என்னென்ன வேதியியல் அம்சங்கள் உள்ளதோ அவை அனைத் தும் ஓட்சிலிலும் உள்ளது. இது உடலில் சர்க்கரை அளவை அதிகமாக்கி இன்சூலின் ஹார்மோனை தூண்டிவிட அதன் பயனாக உறக்கம் தூண்டும். ஆகவே இர வில் ஓட்ஸ் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் போடலாம்.

5.சூடான பால்:

பொதுவாக குழந்தைகள் அழுதால், அதை தூங்கவைப்பதற்காக உடனே தாய்பால் கொடுப்பார். பாலில் வாழைப்பழத்தில் உள்ள எல்ட்ரிப்டோபன் சத்து பாலிலும் உள்ளது. தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் சூடான ஒரு கப்பால் குடித்தால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். இரவு உறக்கத்திற்காக தூக்க மாத் திரை பயன்படுத்துவதற்கு பதிலாக மேற்கூறியுள்ளதை சாப்பிட்டால் போதுமானது.