இன்றைய பரபரப்பு செய்தி !

FlashNews-Logo

1.பள்ளிகொண்டா ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்து டிஜிபி அசோக் குமார் உத்தரவு.

2.விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மாற்றம் – மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு.

3.சென்னை மக்களின் கனவு திட்டம் மெட்ரோ ரெயில் : ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

4.பிடி வாரன்ட் பிறப்பிக்க பட்ட தலைமறைவு குற்றவாளிகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி.

5.தே.மு.தி.க. செல்வாக்கை இழந்துவிட்டது: டாக்டர் ராமதாஸ் தாக்கு.

6.மதுரை மேல அனுபானுபானடியில் ரவுடி சாத்தியா மர்மநபர்களால் வெட்டி கொலை.

7.குமரி : தக்கலையில் திமுக கோஷ்டி மோதல்; மேற்கு மாவட்ட செயலாளர் மனேதங்கராஜ் மீது 294c,323,506(2),324 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தக்கலை போலீசார் வழக்கு பதிவு.

10.தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஆம்பூர் எம்எல்ஏவை கைது செய்ய விஜயபாரத மக்கள் கட்சி ADGPயிடம் மனு.

11.பூடான், நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு.

12.புதுச்சேரியில் பெண்களால் சூறையாடப்பட்ட சாராயக்கடை கூடுதல் விலைக்கு ஏலம் ரூ.18.54 லட்சத்து ஏலம் போனது.மாதர் சங்க நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு.

13.மலேசியா விமானத்தில் 54 நட்சத்திர ஆமைகள் பிடிபட்டன, ராமநாதபுரம் முகமது அலி கைது.

14.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தனியார் உணவகத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி.

15.திருச்சி திருவெறும்பூர் அருகே இரண்டு பேருந்து மோதி அதில் ஒரு பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

16.ஐ.பி.எல் நிதி மோசடியில் சிக்கி, லண்டனில் வசித்து வரும் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக, ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசிடம் மத்திய அரசு விரைவில் கேட்டுக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

17.கபினி அணை நிரம்பியது ஆனால் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை மதியம் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

18.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் ஓரே நாளில் நான்கு அடி உயர்ந்து .தற்பொழுது அணையின் நீர்மட்டம் 90 அடியில் 75 அடியாக உள்ளது.

19.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளம் குறைந்து. தடை நீக்கம் இன்று காலைமுதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

20.காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது : குஷ்பு.

21.விருதுநகர் அருகே பைக் மோதி அரசு பேருந்து பணியாளர் சாவு.

22.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 16பேர் கைது.