இன்றைய பரபரப்பு செய்திகள் 18.08.15 !

உச்சநீதிமன்றத்திற்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்க உள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு : இளங்கோவன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை தமிழக அரசே வன்முறையை தூண்டிவிடுகிறது. தொடர் வன்முறையில் அதிமுகவினர் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் – ஈவிகேஎஸ் இளங்கோவன் .
ஆந்திர மாநிலம் புத்துா் அருகே லாாியில் கடத்த முயன்ற ரூ ஒரு கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்.
தமிழகத்தை சோ்ந்த முப்பது போ் கைது
ஒருவா் தப்பி சென்றதாக தகவல்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி இன்று அமேதி செல்கிறார்.
பெங்களூருவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கம்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்.
இலங்கை தேர்தலில் ராஜபக்சே தங்கை சொந்த ஊரில் தோல்வி.
பண்ருட்டியில் நள்ளிரவில் கோஷ்டி மோதல்: 5 வீடுகள் சூறை – 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்.
பா.ஜனதாவுடன் உறவு இல்லை: தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் – ஜி.கே.வாசன்.
சென்னை குரோம்பேட்டையில் சாலை கடந்த கணவன் மனைவி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழ்ப்பு.
நாகரீகமற்ற பேச்சு இளங்கோவனுக்கு சரத்குமார் கண்டனம்.
பெரம்பலூர் செங்குளம் கைகாட்டியில் பின்னால் வந்த லாரி மோதி ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
இந்தோனேஷியா விமான விபத்து: 54 உடல்களும் மீட்பு .
காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் அடுத்த தையூர் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2-ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல் – செங்கல்பட்டு கோட்டாச்சியர் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வையாவூரில் குடும்ப தகராறு காரணமாக நாகராஜ் – 30. என்பவர் தூக்கிட்டு தற்கொலை – காவல்துறையினர் விசாரனை.
புழல் பகுதியில் அதிகாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் ஊழியர் பெருமாள் உயிரிழப்பு. கார் ஓட்டுனர் காயம். கார் லேசான சேதம். லாரி ஓட்டுனரை கைது செய்து போலீஸ் விசாரணை.
தமிழகம் முழுதும் ஈவிகேஎஸ் உருவபொம்மை எரிப்பு சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயற்சி , மணப்பாக்கத்தில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டை தாக்க முயற்சி . காங்கிரசார் திரண்டதால் இருதரப்பும் கற்கள் கட்டைகளை வீசி தாக்கிகொண்டதால் பரபரப்பு.