இன்றைய பரபரப்பு செய்திகள் 24.07.15 !

FlashNews-Logo

1.மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளி – திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு.

2.தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.

3.நாடாளுமன்றம் முடக்கம் – ரூ.25 கோடி இழப்பு.

4.10- ம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு : இன்று மாலை முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (www.dge.tn.nic.in) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5.டெல்லியில் தமிழக பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசிய நான், தமிழக முதல்வரை சந்தித்து பிரச்சனைகள் குறித்து பேச முடியவில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை.

6.மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த ரகுபதி கமிஷன் அறிக்கை ஆகஸ்ட் இறுதிக்குள் சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் . அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தலைமை நீதிபதி அமர்வில் தகவல். பின்னர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

7.ஆம்பூர் கலவரத்தில் கைது செய்யபட்டு வேலூர்,கடலூர்.சேலம்.சிறையில் இருந்து 132 பேர் வெளியே வந்தனர் ஆம்பூர்க்கு வருவதாக தகவல்.

8.சூலூரில் அதிமுக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் சூலூர் தொகுதி எம்எல்ஏ தினகரன் தலைமையில் சூலூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

9.திண்டுக்கல் மான் வேட்டையாடிய நான்கு பேர் கைது.

10.வாணியம்பாடி டி.எஸ்.பி.அலுவலகம் செல்லும் வழியில் ஆண் சடலம் மீட்பு கொலையா ? போலிசார் விசாரணை.

11.மான் வேட்டையில் ஒரு எஸ்.ஐ. சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவரை தப்ப வைக்க திண்டுக்கல் டி.எஸ்.பி அலுவலகத்தில் பேரம் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12.பாளை அரசு மருத்துவமனையில் சுற்றி திரிந்த போலி டாக்டர் பிரியாவிடம்
காவல்துறை விசாரணை .

13.ஆத்தூர் அருகே ரயில்பாதையில் 24 வயது ஆண் பிணம்.

14.சித்தா , ஆயுர்வேத படிப்பு – விண்ணப்பம் பெற இன்றே கடைசி, 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

15.கரூர் அருகே மூலிமங்கலத்தில் பஸ்-லாரி மோதியதில் சுமார் 10 பயணிகள் காயம் – போலிசார் விசாரணை.

16.லால்குடி அருகே கீலஅன்பில் கிராமத்தில் மழைக்கு வீடு இடிந்து பெண் பலி – மூவர் படுகாயம்.

17.ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்துவதை கண்டித்து பழனியில் வக்கீல் கோர்ட் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.

18.ஓசூர் வழியாக பெங்களுருக்கு அனுமதியின்று மணல் கடத்திய 1 லாரி 4 யூனிட் மணலுடன் பறிமுதல்.