இந்தியாவில் குழந்தை தொ‌ழிலாள‌ர் இல்லாத நிலை உருவாக்க இன்னும் 100 வருடம் ஆகுமாம்…

child-labour-india-9886713

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது கிரை என்ற குழந்தைகள் அமைப்பு.

சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You), அதாவது சுருக்கமாக கிரை ( CRY) என்ற அமைப்பு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் படி, ஆண்டுதோறும் 2.2 என்ற விகிதத்திலேயே குழந்தைத்தொழிலாளர் முறை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இன்னமும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாக இந்த அமைப்புக் கூறுகிறது. இது ஆண்டு தோறும் 2.2 என்ற விகிதத்தில் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.