இணையதள சேவையில் மக்களுக்குக் கட்டுப்பாடு கூடாது…

vikho

சென்னை: இணையதள சேவைகள் மக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய சேவைகளை இலவசமாக வழங்குவதால் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.