ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்பு

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சட்டசபை சபாநாயகர் தனபால் ஜெ.,க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.