அல்…

1907629_882814128445978_3273119753390966099_n

என்னுள் நிறைந்திருக்கும்
காதல் அல்லவா!
உன்னுள் உறைந்திருக்கும்
காதல் அல்லவா!
அல்லும் பகலும் 
அல்லலுற்று – மனம்
அழன்று போய் நிற்பது
பேதை நான் அல்லவா!
கண்ணீர் கசியும் முன்
கைகளில் அள்ளவா!
தனியாய் அல்குதல்
பெரும் பிணி .அல்லவா!
அல்லோன் வந்தென்னை
ஆட்கொள்ள பார்ப்பதை –
உளவு பார்த்தது போதும்
துணையாய் அல் வா!

———————

அல்-(பெயர்ச்சொல்)
இரவு
அல்லோன் – நிலவு
அல்குதல் – தங்குதல்

– செம்பருத்தி