அரபிக்கடலில் உருவானது “அஷோபா’ புயல்!

cyclone

தென்மேற்கு பருவமழை துவங்கியிருக்கும் நிலையில், அரபிக்கடலில் “அஷோபா’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயல், மத்திய அரபிக்கடலின் கிழக்குப்பகுதியில் உருவாகியுள்ளதாகவும், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பைக்கு மேற்கே 830 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள அஷோபா புயல், மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால், தெற்கு குஜராத், கடலோர கர்நாடகா, கோவா உள்ளிட்ட மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக மாநில மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.