அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம்.

cricket

Venkatesh, [19.05.15 17:48]
அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம்.

ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி முறையே (2010, 2011) ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும்.

இந்த தொடரின் ஆரம்பம் முதலே சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 9 ஆட்டத்தில் வெற்றி மற்றும் 5 போட்டியில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய அணிகளிடம் தோற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் திகழ்கிறது.

புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தன் மூலம் இறுதிப்போட்டியில் நுழைய 2 முறை வாய்ப்பு இருக்கிறது.

ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் 4 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோல்வி, பின்வரும் ஆட்டத்தில் தோல்வியில் இருந்து மீண்டு தொடர்ச்சியாக 5 போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. 2–வது இடத்தை பிடித்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைய சென்னையை போல 2 முறை வாய்ப்பு பெற்றது. ‘பிளேஆப்’ முறை 2011–ல் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னையை போலவே மும்பை அணியும் 5–வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 2011–ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி சமபலத்துடன் உள்ளது.

சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. 2011–ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான்‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது 3–வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது.

எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவதால் தோல்வி அடைந்தால் வெளியேற்றப்படும். சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணியாகும்.

கடந்த முறை மயிரிழையில் ‘பிளேஆப்’ வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த முறை கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் 4–வது இடத்தை பிடித்து வாய்ப்பை பெற்றது.

அறிமுக ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி இந்த தொடரில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் சரிவு ஏற்பட்டபோதும் அதன் பின் சுதாரித்து கொண்டு கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது. 2–வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றில் ஆடுகிறது.

ஐபிஎல் சீசன் 8 போட்டிகளில் வீரர்கள் விளையாடி உள்ள போட்டிகளை பார்க்கையில் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 562 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் அஜின்கெய ரஹானே 498 ரன்கள் எடுத்து 2 வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர் வீராட் கோலி 481 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும், அதே அணியின் டி வில்லியர்ஸ் 446 ரன்கள் எடுத்து 4-வது இடத்திலும் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் 439 ரன்கள் எடுத்து 5 வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்சின் டிவைன் பிரவோ 20 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன் லசித் மலிங்கா (19 விக்கெட்) ,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் யுஸ்வேந்திர சாகல் (19 விக்கெட்) , அதே அணியை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் (18 விக்கெட்),ஆசிஸ் நெக்ரா( 18 விக்கெட்) உள்ளனர்.

அதிக ரன்கள் எடுத்து வரும் பட்டியலில் டேவிட் வார்னரும்( 562) அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லும் ( 34) ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் டிவில்லியர்ஸ்( 133*)

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் மிகவும் மோசமான விளையாட்டையே வெளிப்படுத்தி உள்ளனர். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ரூ.16 கோடிக்கு யுவராஜ் சிங் ஏலம் எடுக்கபட்டு உள்ளார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போனவர் இவர் தான். யுவராஜ்சிங் மொத்தம், 13 போட்டிகளில் பேட் செய்துள்ளார். மொத்தம் சேர்த்த ரன்கள் 248. இதில் இரு அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன் என்பது 57. பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 118. மொத்தம் சேர்த்த பவுண்டரிகள் 23, சிக்சர்கள் 10. ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆனார்.

சென்னைக்கு-9, ராஜஸ்தான்-27, பஞ்சாப்-54, ஹைதராபாத்-9, கொல்கத்தா-21, மும்பை-2, பெங்களூர்-2, ராஜஸ்தான்-22, மும்பை-57, கொல்கத்தா-0, ஹைதராபாத்-2, சென்னை-32, பெங்களூர்-11. பந்து வீச்சிலும் சொதப்பல் யுவராஜ்சிங் பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. 9 ஓவர்கள் வீசிய யுவராஜ்சிங், 72 ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.